Perfume-ஐ மோந்து பார்த்த சிறுமி மூளைச்சாவு... ட்ரெண்டிங் வீடியோவால் உயிரை விட்டார் - உலகை உலுக்கிய மரண காட்சிகள்
டிக் டாக் மூலம் உந்தப்பட்டு, டியோடரன்ட்டை சுவாசித்த 13 வயதான ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
உலகெங்கும் நூறு கோடி உபயோகிப்பாளர்களை கொண்ட டிக்டாக் செயலி, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலி மூலம் பல கோடி பேர் தினமும் காணொளிகளை பார்த்து மகிழ்கின்றனர்.
ஆனால் இதில் எதிர்மறையான, விபரீத விளைவுகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. குரோமிங் என்று அழைக்கப்படும், வாசனை பொருட்களை நுகர்வது பற்றிய காணொளிகள் டிக்டாக்கில் டிரென்டாகியது வினையாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த எஸ்ரா ஹெயின்ஸ் என்ற 13 வயது சிறுமி, இதற்கு பலியாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடலில் ஏற்படும் வியார்வை நாற்றம் மற்றும் துர்நாற்றத்தை தடுக்கும் திறன் கொண்ட டியோடரன்ட்டை முகர்ந்து பார்த்து, சுவாசித்து, அதை காணொளி எடுத்து டிக் டாக்கில் பகிரும் டிரெண்டிற்கு இவர் பலியாகியுள்ளார்.
டியோடரென்ட்டை அளவுக்கு அளவுக்கு அதிகமாக சுவாசித்ததால், எஸ்ரா ஹெயின்ஸுக்கு கடந்த மார்ச் 31ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் கோமா நிலைக்கு சென்றார். மூளை சாவு ஏற்பட்டதால், உயிர் காக்கும் கருவிகள் பொருத்தி செயற்கை சுவாசம் மூலம் அவர் பல நாட்கள் உயிருடன் இருந்தார்.
மூளைச் சாவில் இருந்து மீளவே முடியாது என்பது உறுதி செய்யப்பட்டபின், அவரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்ட பின், அவர் உயிரிழந்துள்ளார்.
எஸ்ரா ஹெயின்ஸ் மரணத்தை தொடர்ந்து, இத்தகைய விபரீத பழக்கங்கள் ஏற்படுத்தும் பாதகங்கள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாக, விக்டோரியா மாகாண கல்வித் துறை அறிவித்துள்ளது.
நச்சுத்தன்மை குறைந்த அளவு கொண்ட டியோடரன்ட்களை உருவாக்க பிரச்சாரம் செய்யப் போவதாக எஸ்ரா ஹெயின்ஸின் பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில், 2019ல் இரண்டு 16 வயது சிறுவர்கள், இதே போல ஒரு அபயாகரமான ரசயானத்தை முகர்ந்ததால் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வுல்வொர்த்ஸ், கோல்ஸ் போன்ற ஆஸ்திரேலிய சூப்பர் மார்க்கெட்டுகளில், டியோடரடன்ட்களை, கண்ணாடி பீரோக்களில் பூட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.