காங்கிரஸுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..!

Update: 2022-09-26 12:11 GMT

காங்கிரஸில் இருந்து விலங்கிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக விடுதலை கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன் வைத்த அவர், புதிய கட்சியை தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், தனிக்கட்சியில் போட்டியிடுவதாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜனநாயக விடுதலை கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். ஜனநாயகம், அமைதி மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்சிக்கு பெயரிட்டதாகவும், தனது கட்சி சர்வதிகாரத்தை கொண்டிருக்காது என்றும் உறுதி அளித்தார். கட்சியின் கொடி மஞ்சள், வெள்ளை மற்றும் நீல நிறைத்தில் இருக்கும் என்றும் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்