நாட்டிலேயே முதன்முறையாக.. வாடகை தாய் முறையில் கன்று ஈன்ற பசு.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த அபூர்வம்
திருப்பதி தேவஸ்தானமும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, வட மாநிலங்களில் உள்ள உயர் ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு எடுத்து வரப்பட்டன.
அவை வேறு வகையான உயர் ரக காளைகளின் விந்தணு மூலம் கருத்தரிப்பு செய்யப்பட்டன. அந்த கருக்கள், தென்னிந்திய உயர் ரக நாட்டு பசுக்களான ஓங்கோல் உள்ளிட்ட பசுக்களின் கருப்பையில் செலுத்தப்பட்டு, திருப்பதி தேவஸ்தான கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒரு ஓங்கோல் பசு, 'சாகிவால்' இனத்தை சேர்ந்த உயர் ரக கிடாரி கன்றை ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.