'சென்னையில் ஒரு மெஸ்ஸி' "இதுதான் எங்கள் இலக்கு" - தனியார் நிறுவனத்தின் மிரள வைக்கும் மெகா திட்டம்
- மாமல்லபுரத்தில், ஃப்ரஷ் வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், 100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கால்பந்து அகாடமியை தொடங்கியுள்ளார்.
- 'சென்னையில் ஒரு மெஸ்ஸி' என்ற இலக்குடன் தொடங்கியுள்ள இந்த கால்பந்து அகாடமியில் 23 ஏக்கர் பரப்பளவில், தென் கிழக்கு ஆசியாவின் முதல் இருபாலாருக்கான கால்பந்து ஆடுகளம் அமைந்துள்ளது.
- பள்ளி, விடுதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கால்பந்து அகாடமியை ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் 100 கோடி முதலீட்டில் கட்டமைத்துள்ளார்.
- இது குறித்து பேசிய அவர், தன் மகனை அடையாறில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாட அழைத்து சென்றபோது, அங்கு அடிப்படை வசதிகள் இன்றி சேற்றில் குழந்தைகள் விளையாடுவதை கண்டதும் இந்த எண்ணம் தோன்றியதாகவும் இந்தியாவில் பல திறமைசாலிகள் உள்ள நிலையில், அவர்களுக்கு உலக தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்தி தரும் எண்ணத்துடன் இந்த அகாடமியை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.