பரளியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு | Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்திற்கு சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறந்து விடபட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வரும் சுற்றுலாபயணிகள், பரளியாற்றில் குளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நண்பர்கள் 7 பேர், மாத்தூர் தொட்டி பாலத்தின் அடிப்பகுதியில் பரளியாற்றில் குளித்தனர். அப்போது, கார்த்திகேயன் மற்றும் நாகராஜ் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் மாயமான இரண்டு இளைஞர்களை தேடினர். கார்த்திகேயன் மற்றும் நாகராஜ் உடலை இரண்டு மணி நேரத்தில் மீட்டனர்.