முதல் முறையாக செயற்கையில் மீன், ஆட்டிறைச்சி

Update: 2023-05-04 16:27 GMT
  • 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், மீன் இறைச்சி செயற்கை முறையில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.ஆய்வுக் கூடங்களில், பயோ தொழில்நுட்பம் மூலம் பல வகையான செல்களை வளர்த்தெடுத்து, செயற்கை முறையில் மாட்டுக் கறி, ஆட்டுக்கறி உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த மார்ச்சில்,
  • அமெரிக்காவின் குட் மீட் நிறுவனம் உருவாக்கிய கோழி இறைச்சிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த Steakholder Foods என்ற நிறுவனம், முதல் முறையாக மீன் இறைச்சியை செயற்கை முறையில் உருவாக்கியுள்ளது. எழும்பு துண்டுகள் இல்லாத இந்த மீன் இறைச்சி, 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. குரூப்பர் என்ற மீனின் செல்களை எடுத்து, அவற்றை ஆய்வுக் கூடத்தில் செயற்கை முறையில் பெருகச் செய்து, மீன் இறைச்சி உருவாக்கப்படுகிறது. சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவில் இதற்கு அங்கீகாரம் பெற்று, விற்பனை செய்ய Steakholder Foods நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்