இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணி அபார வெற்றி
முதல் டி20 கிரிக்கெட் போட்டி.. இந்தியா Vs இங்கிலாந்து - ஆட்டத்தை தட்டிச்சென்ற அணி?
இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதை தொடர்ந்து
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்தது இந்தியா.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 21 ரன்கள், ஹேரி புரூக் 28 ரன்களும், மொயீன் அலி 36 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து 19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.