மகளுடனான காதலை கைவிட சொன்ன தந்தை....கண்டித்தும் தொடர்ந்த காதலால் படுகொலை....

Update: 2023-05-29 15:19 GMT

கொல்லப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த கணபதி ராஜா. 28 வயதாகும் இவர் சரக்கு வாகன ஓட்டுனர். மதுரை தென்றல் நகர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.இந்நிலையில் தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இப்படி கழுத்து, முகம் என பல இடங்களில் வெட்டு காயங்களுடன் தண்டவாளம் அருகே சடலமாக கிடந்திருக்கிறார் கணபதி ராஜா. சம்பவ இடத்தை அலசி ஆராய்ந்து, சடலத்தை மீட்ட போலீசார், நடந்திருப்பது தற்கொலையாக இருக்கலாமோ என்று சந்தேகித்தனர். ஆனால் சடலத்தில் இருந்த வெட்டுக்காயங்கள் அத்தனையும் நடந்தது கொலை தான் என சான்றளித்தன.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி இருக்கிறார்கள். அந்த தேடுதல் வேட்டையில் மாயழகு என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் நடந்த கொலை வெட்ட வெளிச்சாமாகி இருக்கிறது. ஆம்.....மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த மாயழகுக்கு திருமணமாகி இரண்டு மகன் ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அந்த 19 வயதான மாயழகுவின் ஒரே ஒரு மகளும் கணபதி ராஜாவுடன் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த விஷியம் மாயழகுக்கு தெரியவர கணபதி ராஜாவிடம் காதலை கைவிடும் படி கண்டித்திருக்கிறார். ஆனால் அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத கணபதி ராஜா, தொடர்ந்து அந்த பெண்ணுடன் காதல் வளர்த்து வந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சித்திரை திருவிழாவில் கணபதி ராஜாவும், மாயழகுவின் மகளும் ஒன்றாக சுற்றி திரிந்து காதல் வளர்த்திருக்கிறார்கள். இதை மாயழகு கண்கூடாக பார்த்து கொதித்து போயிருக்கிறார். இனியும் இவனை விட்டு வைக்க கூடாதென அன்றே, கணபதி ராஜாவுக்கு நாள் குறித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று தனது இரண்டு மகன்களுடன் களத்தில் இறங்கிய மாயழகு, கணபதி ராஜாவை மடக்கி பிடித்து, கத்தியால் குத்தி கொடுரமாக கொலை செய்திருக்கிறார். கொலையை மறைக்க சடலத்தை தண்டவாளத்தில் வீசி விட்டு மூவரும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர்.விசாரனையில் முடிவில் போலீசார், மாயழகு மற்றும் அவரது இரு மகன்களான காளிதாஸ், கண்ணதாசன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்