சென்னை கொடுங்கையூரில், வேலைக்கு செல்லாத மகனை சரமாரியாக வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
எழில் நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ், வேலைக்கு செல்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு, வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலைக்கு ஏன் செல்லவில்லை என விக்னேஷிடம் அவரது தந்தை உதயகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உதயகுமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு, விக்னேஷின் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த விக்னேஷீக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.