கிணற்று நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு ... மகனுக்கு நீச்சல் பழகி கொடுத்தபோது விபரீதம்
ஓமலூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி, தந்தை மகன் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.
இவர் தனது மகன் பிரகதீஷுக்கு கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துள்ளார்.
இதனிடையே, சிறுவன் நீரில் முழ்கிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற ராஜாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்று நீரில் மூழ்கி தந்தை, மகன் பலி/மகனுக்கு நீச்சல் பழகி கொடுத்தபோது விபரீதம்இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.