வேகமாக பரவும் பிஎப்.7 கொரோனா - இன்று பிற்பகல் 3 மணிக்கு முக்கிய ஆலோசனை | corona | bf7
கொரோனா பரவல் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 4 பேருக்கு பிஎஃப்7 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் 3 மணிக்கு மாநில அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.