#Exclusive | மணிப்பூரில் நடப்பது என்ன...? - "வீடியோவை பார்த்ததும் வெட்கமாக இருந்தது"- வன்முறைக்கு காரணம் என்ன...? - இரோம் சர்மிளா தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

Update: 2023-07-22 06:13 GMT

மணிப்பூரில் நடப்பது என்ன...? வன்முறைக்கு யார் காரணம் என்பது குறித்து இரோம் சர்மிளா பகிர்ந்த தகவலை இந்த தொகுப்பில் காணலாம்...

இரோம் சர்மிளா... இந்திய வரலாற்றில் மறைக்க முடியாது இரும்பு பெண்மணி... மணிப்பூரின் மகள்..

மணிப்பூரில் ராணுவ சட்டத்திற்கு எதிராக நீண்டகாலம்... அதாவது 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதம் இருந்தவர். 2016-ல் முடித்துக் கொண்டவர் பெங்களூருவில் தங்கினார். மணிப்பூரின் அமைதிக்காக போராடிய இரோம் இப்போது அங்கு நடக்கும் சம்பவங்களால் விக்கி நிற்கிறார்..

மனித குலத்தையே உலுக்கிய அந்த வீடியோவில் சகோதரிகளின் துயரை கண்ட துவண்டு நிற்கிறார். அவரிடம் மணிப்பூர் நிலைகுறித்து அறிந்துகொள்ள பேசினோம்... மிக வேதனையாக உள்ளது என திக்கி நின்றவர், வெட்கமாக இருக்கிறது என வேதனையில் வெதும்பினார்.

கடந்தகால நினைவுகளை எல்லாம் சுமந்து நிற்கும் இரோம், இப்போதைக்கு வன்முறைக்கு யார் பொறுப்பு என கேட்டால் அவரிடம் பதிலாக... நல்ல தலைமையின்மை என்ற பதிலும் உச்சநீதிமன்றமும் எனக் கைக்காட்டுகிறார்

மாநிலத்தில் வன்முறைக்கு மைதேயி-குக்கி பழங்குடியினர் இடையே இடஒதுக்கீட்டு தொடர்பான பிரச்சினையே அடிப்படையாக இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் மைதேயி சமூகத்தினர், தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என போராடினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்திற்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கியது... இதற்கு எதிராக குக்கி சமூகத்தினர் போராட்டம் நடத்தியதும் வன்முறை வெடித்தது. இப்போது வரையில் வெப்பம் தணியாத சூழலில், நிலையை சமாளிக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்கிறார் இரோம் சர்மிளா...

மக்களும் ஒருவருக்கு ஒருவர் மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சொல்கிறார் இரோம் சர்மிளா...

அமைதியை கொண்டுவர மத்திய , மாநில அரசுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இரோம் சர்மிளா, கொடூர குற்றத்தை இழைத்தவர்களுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்