“பள்ளி பாடத்தில் ஆன்லைன் ரம்மி “.. “உடனடியாக நீக்க வேண்டும்“ - முன்னாள் அமைச்சர் ரெக்வஸ்ட்

Update: 2023-04-01 02:38 GMT
  • பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த முடியாத அளவிற்கு பணிசுமை இருப்பதாகவும், இந்த நிலையை மாற்ற வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
  • சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், எமிஸ் பணிகள் அதிக அளவில் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும், பாடம் நடத்த முடியாத அளவிற்கு அவர்களுக்கு பணி சுமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
  • ஆசிரியர்களை முதலில் பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற அவர், 5 வகுப்பு பாடத்தில் இருக்கும் ஆன்லைன் ரம்மி குறித்த பகுதியை நீக்க வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்