"உடம்பு முடியலன்னு சொன்னாலும் விடமாட்றாங்க... "வேலை தான் முக்கியம் -னு சொல்றாங்க" - இருளர் இன மக்கள்

Update: 2023-04-11 14:17 GMT
  • இருளர் இன மக்கள், தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகக் கூறி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
  • பண்ருட்டியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர், செங்கல்பட்டு மாவட்டம், மதூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களை, தஞ்சாவூருக்கு கரும்பு வெட்டும் பணிக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
  • கடந்த 5 மாதங்களாக, இந்த மக்கள் அங்கு பணியாற்றி வரும் நிலையில், தங்களிடமிருந்து அதிகப்படியான வேலை வாங்குவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • மேலும், அவர்களை அங்கிருந்து விடுவிக்க வேண்டுமானால், பணம் கொடுக்க வேண்டும் என சிறுமியை பணையமாக வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
  • இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்