"இடைத்தேர்தலில் திமுக வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறது"... தேர்தல் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம்

Update: 2023-02-15 02:37 GMT
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணத்தை வாரி வழங்குவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
  • இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அன்று திமுகவை சேர்ந்த அமைச்சர் கே.என். நேரு மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் வாக்காளர்களுக்கு பண விநியோகம் வழங்குவது தொடர்பாக பேசிய ஆடியோவை வெளியிட்டதாக கூறியுள்ளார்.
  • கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா இரண்டு கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளார்.
  • இத்தகைய புகார் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்