மீண்டும் எலான் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்?

Update: 2022-09-14 15:50 GMT

ட்விட்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிற்கு மூன்றரை லட்சம் கோடிக்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை எலான் மஸ்க்கிடம் விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனிடையே எலான் மஸ்க் கேட்டபடி, ட்விட்டரில் உள்ள போலி மற்றும் பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் குறித்து தகவல்களைத் தர ட்விட்டர் நிர்வாகக் குழு மறுப்பு தெரிவித்ததால் ட்விட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டார்.

இதை அடுத்து அவர் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கிற்கு மூன்றரை லட்சம் கோடிக்கு ட்விட்டரை விற்க பங்குதாரர்கள் தற்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றத்தின் மூலமே தீர்வு எட்டப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்