சூடுபிடிக்கும் தேர்தல்.. "ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம்" - குஜராத் அரசு அதிரடி | gas cylinder

Update: 2022-10-18 02:46 GMT

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த அதிரடி அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீத்து வஹானி வெளியிட்டார். மாநிலத்தில் உள்ள 38 லட்சம் குடும்ப தலைவிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதற்காக 650 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் சாமானிய மக்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரத்து 700 ரூபாய் பணம் மிச்சமாகும் என்று தெரிவித்துள்ளார். சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி கேஸ் மீதான வாட் வரியில் 10 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்