ஆளுநர் ஆர்.ரன்.ரவியின் கருத்துக்கு எதிரொலி - நம்பர் 1 Trend ஆன வார்த்தை | Rn Ravi
சென்னை, கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என பேசியிருந்தார். இதையடுத்து இந்திய அளவில், ஹேஷ்டேக் தமிழ்நாடு என்ற வார்த்தை ட்விட்டரில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தமிழ்நாடு என்ற வார்த்தையை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். மேலும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் முயற்சிகளை நினைவு கூர்ந்தும், பாராட்டியும் நெட்டிசன்கள் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.