ஜிப்மரில் மருந்து பற்றாக்குறை.. "இல்லாத மருந்தை வெளியில் வாங்கவும்" - ஜிப்மர் அதிரடி அறிக்கை

Update: 2022-09-22 05:04 GMT

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறைகளின் மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அனுதினமும் வந்து செல்லும் நிலையில், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத்தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து பற்றாக்குறையால், கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என்றும், இல்லாத அத்தியாவசிய மருந்தை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு குறிப்பிட்டு தனிச்சீட்டில் எழுதி கொடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் மருந்தகத்தில் உள்ள மருந்து பட்டியல் துறைகளுக்கும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்