குடிநீர் வசதி, கழிப்பறைகள், ஓய்வறை.. சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

Update: 2023-07-06 04:31 GMT

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பான சட்ட திருத்தங்கள், அமலுக்கு வந்துள்ளன.

10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு, விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் பதிவு சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் வகையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கடை அல்லது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சுகாதாரமான குடிநீர் வசதி, போதிய எண்ணிக்கையிலான கழிப்பறைகள், ஓய்வறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டுமெனவும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட திருத்தங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, இரு சட்ட திருத்தங்களும் அமலுக்கு வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்