திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சின்னஓபுலாபுரம் பகுதியில் பால் முனீஸ்வரர் கோயிலின் மதில் சுவரை ஏறி குதித்து 3 பேர் உள்ள நுழைந்தனர். டவுசர் மட்டும் அணிந்திருந்த அவர்களில் 2 பேர் வெளியே காவலுக்கு நின்ற நிலையில், ஒருவர் மட்டும் கடப்பாரை கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க முயற்சித்தார். நீண்ட நேரமாகியும் பூட்டை உடைக்க முடியாததால், 3 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.