வீட்டு நாய், தெருநாய்..எந்த நாய் கடிச்சாலும் ஜாக்கிரதை - எச்சரிக்கும் மருத்துவர்கள்..333 பேருக்கு பயங்கரம்
எந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கேரளாவில் தெரு நாய் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த மாதம் 333 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிறுவர்களை வளர்ப்பு நாய் அல்லது தெரு நாய் என எந்த நாய்கள் சிறிய அளவில் கடித்தாலும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.