இனி டாலர் இல்லை.. இந்திய ரூபாய் தான்..! 18 நாடுகளுக்கு அனுமதி.. கைகொடுக்கும் ரஷ்யா | Russia | India
- ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா உட்பட 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்துள்ளன.
- இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே செய்யும் பரிமாற்றங்களுக்கு அமெரிக்க டாலர் இல்லாமல், இந்திய ரூபாயிலேயே செய்யலாம்.
- இதனை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், இதற்கு தேவையான வோஸ்ட்ரோ கணக்குகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- டாலருக்கு எதிராக உள்ளூர் பணத்தின் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரஷ்யா குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய் பயன்படுத்துவதால், ஏற்றுமதி அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.