ஓரின சேர்க்கையாளர்கள் த‌த்தெடுக்க உரிமை உண்டா? - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து

Update: 2023-05-11 14:12 GMT

ஓரின சேர்க்கையில் உள்ள நபர், தனிபட்ட முறையில் குழந்தையை தத்தெடுக்க எவ்வித தடையுமில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க கோரி பொதுநல மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மற்றும் தேசிய தத்தெடுப்பு ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி(Aishwarya Bhati) ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், ஓரினசேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தால், தத்தெடுப்பு மற்றும் வாடகை தாய் சட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், இயல்பான தம்பதியருக்கு மட்டுமே த‌த்தெடுக்கும் உரிமை அளிக்க முடியும் என்றும் வாதிட்டார். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தனிப்பட்ட நபர் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க உரிமை கொண்டுள்ளதால், ஓரின சேர்க்கை உறவில் உள்ள நபர் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க எவ்வித தடையுமில்லை என்றும் இதையே தேசிய தத்தெடுப்பு ஆணையத்தின் நிலைப்பாட்டாக எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்