- திமுக தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் மார்ச் 31 ம் தேதி காணொலி மூலம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
- திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக தலைமை சமீபத்தில் நியமித்தது.
- இந்நிலையில் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மார்ச் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், காணொலி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.