திமுக கவுன்சிலர் வீட்டில் கைவரிசை...நகைகளை அள்ளி சென்ற மர்ம நபர்கள் - கோவையில் பரபரப்பு

Update: 2022-12-01 05:50 GMT

கோவை மாவட்டம் சூலூர் அருகே, அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் 9-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன்..

இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், முன்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 29 சவரன் நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்