தலைசுற்ற வைக்கும் 'தாறுமாறு' தக்காளியின் விலை

Update: 2023-07-09 12:19 GMT

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று 15 ரூபாய் அதிகரித்துள்ளது...

நாட்டு தக்காளி 15 ரூபாய் விலை உயர்ந்து இன்று மொத்த விற்பனையில் 95 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 130 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

நவீன் தக்காளியும் 10 ரூபாய் விலை அதிகரித்து 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நேற்று 35 வண்டிகள் வந்த நிலையில் இன்று 30 வண்டிகள் மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று வரத்து குறைவால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்ணை பசுமை கடை மற்றும் நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு சார்பில் தக்காளி 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளை, முள்ளங்கி, வரி கத்திரி, காலிஃப்ளவர், எலுமிச்சை, மாங்காய் 35 ரூபாய்க்கும், தேங்காய் 26 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஊட்டி கேரட் 60 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கர்நாடக பீட்ரூட் 25 ரூபாய்க்கும், பாகற்காய் 55 ரூபாய்க்கும், முருங்கை, அவரை 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கும், பட்டாணி 190 ரூபாய்க்கும், இஞ்சி 260 ரூபாய்க்கும், பூண்டு 180 ரூபாய்க்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தக்காளி விலை மீண்டும் உயர்வு...

நாட்டு தக்காளி ரூ.15 விலை உயர்வு - மொத்த விற்பனையில் ரூ.95க்கும், சில்லறை விற்பனையில் ரூ.130 வரையிலும் விற்பனை

நவீன் தக்காளியும் ரூ.10 விலை அதிகரித்து ரூ.110க்கு விற்பனை

நேற்று 35 வண்டிகள் வந்த நிலையில் இன்று 30 வண்டிகள் மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை உயர்வு

நேற்று ரூ.130க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று வரத்து குறைவால் ரூ.140க்கு விற்பனை

பண்ணை பசுமை கடை, நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு சார்பில் தக்காளி ரூ.58க்கு விற்பனை

கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

உருளை, முள்ளங்கி, வரி கத்திரி, காலிஃப்ளவர், எலுமிச்சை, மாங்காய் - ரூ.35

தேங்காய் - ரூ.26

ஊட்டி கேரட் - ரூ.60

பெங்களூர் கேரட் - ரூ.20

பீன்ஸ் - ரூ.80

ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி - ரூ.40

கர்நாடக பீட்ரூட் - ரூ.25

பாகற்காய் - ரூ.55

முருங்கை, அவரை - ரூ.50

ப.மிளகாய் - ரூ.100

பட்டாணி - ரூ.190

இஞ்சி - ரூ.260

பூண்டு - ரூ.180

Tags:    

மேலும் செய்திகள்