பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் நாகாலாந்து ஐக்கிய ஜனதா தள மாநில குழு கலைப்பு - தேசிய தலைமை

Update: 2023-03-09 15:35 GMT

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாகாலாந்து மாநில குழுவை கலைப்பதாக, தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியில் வென்ற நிலையில், ஆளும் என்.டி.பி.பி. - பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, மாநில தலைவர் சென்சுமோ லோத்தா அறிவித்தார். இதனிடையே, தேசிய தலைமையை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்திருப்பதாகவும், மாநில குழுவின் இந்த முடிவு ஒழுக்கக்கேடானது எனவும் விமர்சித்து, மாநில குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்