வீட்டின் சுற்றுச்சுவர் அமைப்பதில் தகராறு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தாக்கிய கும்பல்

Update: 2023-01-25 23:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, வீட்டின் சுற்றுச்சுவர் அமைப்பதில் எழுந்த தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, கண்மூடித்தனமாக தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


போளூர் அடுத்த செங்குணம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தனது வீட்டின் அருகே சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சுற்றுச்சுவர் அமைப்பதில், சந்திரசேகரனுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயசங்கர் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசங்கர், வெளி ஆட்களை அழைத்து வந்து, சந்திரசேகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில், சந்திரசேகரனின் குடும்பத்தாரை, ஜெயசங்கருக்கு ஆதரவான நபர்கள், மரக்கட்டை, கொம்பு மற்றும் ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதுதொடர்பான புகாரின் பேரில், சுபாஷ், பிரகாஷ், மணிகண்டன், வசந்தகுமார், சசிகுமார் ஆகிய 5 பேரை கைது செய்து, 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான முக்கிய நபர், ஜெயசங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்