புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, 7 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுளது. செலவினங்களைக் குறைக்கவும், எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாததாலும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த கடினமான முடிவைத் தாங்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக டிஸ்னி குறிப்பிட்டுள்ளது.