மருத்துவமனையில் 130 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு | Jamshedjee Jeejeebhoy
மும்பை அரசு மருத்துவமனை சர் ஜாம்ஷெட்ஜி ஜிஜிபாய் மருத்துவமனையில், ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை சுமார் 130 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. ஜே.ஜே.மருத்துவமனையின் மருத்துவர் அருண் ரத்தோர் என்பவர் சுவரில் ஓட்டை இருப்பதை கண்டறிந்துள்ளார். மருத்துவமனையின் சுரங்கப்பாதை பிரசவ வார்டில் இருந்து குழந்தைகள் வார்டு வரை நீண்டு காணப்படுகிறது. தற்போது இந்த சுரங்கப்பாதையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.