2 இன்ச்சில் தகர்ந்த தோனியின் கனவு.. சுக்குநூறான 130 கோடி இதயங்கள் - சிந்திய கண்ணீர்.. நீங்கா வடு.. ஆறா ரணம்

Update: 2023-07-10 05:09 GMT

ஓபனிங் மான்டேஜ்... 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்... கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்தில்... 10 அணிகள் பங்கேற்ற தொடரின் லீக் சுற்றில் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா... மான்செஸ்டரில் உள்ள புகழ்பெற்ற old trafford மைதானத்தில் நியூசிலாந்துடன் அரையிறுதி...முதலில் ஆடிய நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. வெயில், மழை என வானிலை மாறிக்கொண்டே இருக்க, தொடர் மழையால் ஜூலை 10ம் தேதி ரிசர்வ் டேவில் போட்டி நடந்தது.ரிசர்வ் டேவில் இந்தியாவிற்கு 240 ரன்கள் இலக்கை நியூசிலாந்து நிர்ணயிக்க, எளிதாக இதனை எட்டிப்பிடித்து இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும் என நம்பி இருந்தனர் ரசிகர்கள்...

ஆனால் நடந்ததோ வேறு... ஆரம்பம் தொட்டே அதிர்ச்சி... ராகுல், ரோகித், அப்போதைய கேப்டன் கோலி ஆகிய மூவரும் தலா 1 ரன்னில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இரையாகினர். தினேஷ் கார்த்திக்கும் வந்தவுடன் செல்ல, சிறிது நேரம் தாக்குப்பிடித்து பண்ட், பாண்டியா ஆட்டமிழந்தனர். 100 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அதன்பின்னர் முன்னாள் கேப்டன் தோனி-ஜடேஜா ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டது. ஒருமுனையில் ஜடேஜா அதிரடி காட்ட, மறுமுனையில் தோனி தனக்கே உரிய பாணியில் கால்குலேட்டிவாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்ட ஜடேஜா, அரைசதமும் கடந்தார்.

77 ரன்களில் ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்றபோது, அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்த பொறுப்பும் தோனி மீது சேர்ந்தது.ஃபெர்குசன் வீசிய 49வது ஓவரின் முதல் பந்தை, சிக்சருக்கு அனுப்பி நம்பிக்கை தந்தார் தோனி...ஆனால் அந்த நம்பிக்கை சற்றுநேரம் கூட நீடிக்கவில்லை... 49வது ஓவரின் 3வது பந்தில் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது.ஃபைன் லெக் திசையில் பந்தை தட்டிவிட்டு 2வது ரன்னுக்கு தோனி ஓடியபோது, அவரை துல்லியமான த்ரோவால் ரன்-அவுட் செய்தார் மார்ட்டின் கப்தில்... நடுவர் கெட்டில்ப்ரோ உள்பட கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவு சுக்குநூறானது அணியை கரை சேர்க்க முடியாத ஏமாற்றத்தில் கலங்கிய கண்களுடன் களத்தில் இருந்து தோனி வெளியேற, அடுத்த சில நிமிடங்களில் ஆல்-அவுட் ஆகி இந்தியா தோல்வி அடைந்தது.இந்தப் போட்டியே தோனிக்கு கடைசி சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது. அரையிறுதியில் தோனி ரன்-அவுட் ஆனதையும், இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தையும் இன்றளவும் ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் புலம்பிதான் வருகின்றனர்.. ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆறாதிருக்கும் வடு அது... ரோகித் மற்றும் ஃபேன்ஸ் அழும் காட்சிகள் கட்டாயம் வைக்கவும்

Tags:    

மேலும் செய்திகள்