வீட்டின் கதவை தட்டிய குடிகாரர்கள்... தட்டிக் கேட்ட பெண்ணின் வீட்டை மந்திரித்து விட்ட "சூனியக்கார கிழவி" - அதிர்ச்சி காட்சிகள்
பையர்நத்தம் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் அருகே சந்துக்கடையில் மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர். ஜெயலட்சுமியின் வீட்டுக் கதவை சில குடிமகன்கள் தட்டுவதால் அவதிப்பட்ட ஜெயலட்சுமி, சந்துக்கடை நடத்தும் ராஜம்மாளிடம் முறையிட்டார். ஆனால் ராஜம்மாள் அவதூறாக பேசுவதாகக் கூறி ஜெயலட்சுமி போலீசில் புகாரளித்தார். இதனிடையே ஜெயலட்சுமியின் வீட்டின் முன்பு, இரவு நேரத்தில் வந்த ராஜம்மாள், கையில் இருந்த எதையோ தெளித்து மந்திரித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.