இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

Update: 2022-09-30 14:06 GMT

தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்பான இடங்களில், யாருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்க, காவல் உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் எத்தனை உள்ளது என்பது குறித்தும், அதில் எத்தனை பேருக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய அதில் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்