திருச்செந்தூரில் புனித நீராடிய பக்தர்கள்.. திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

Update: 2023-04-09 08:54 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, திரும்பிய திசை எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குடும்பம் குடும்பமாக நாழிக் கிணறு மற்றும் கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக பெளர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் கடல் நீர் உள் வாங்குவது வழக்கம் என்ற சூழலில், இம்முறை சுமார் 100 அடிக்கும் மேல் கடல்நீர் உள்வாங்கியது. இதையடுத்து, வெளியே தெரிந்த பாறைகள் அருகே விளையாடியும், போட்டோ எடுத்தும் பக்தர்கள் மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்