காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு வரை 90 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் 120 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற அவரை 90 ரூபாய்கும், 180 ரூபாய்க்கு விற்ற இஞ்சி 200 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி 60 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்ற மாங்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பிற காய்கறிகள் விலை 5 முதல் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், உருளை 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 60 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 40 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 60 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெண்டை, பாகற்காய் 50 ரூபாய்க்கும், கத்திரி 55 ரூபாய்க்கும், முருங்கை 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும், பூண்டு 160 ரூபாய்க்கும், எலுமிச்சை 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வானது ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.