ஊட்டி மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஊட்டி நடுவட்டம், சிங்காரா, கிளன்மார்கன், மாயார் பகுதிகளில் மூன்று நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் மாயார் சிங்காரா நீர் மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தெங்குமரஹடா கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பரிசிலில் சென்று மீன் பிடிக்க கூடாது எனவும் அக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.