திருவாரூர் அருகே நிலத்தகராறில், பெண் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்துறைப்பூண்டி அடுத்த முத்துப்பேட்டை என்ற இடத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராதிகா என்பவர், தனது 2 குழந்தைகளுடன் தந்தையாரின் நிலத்தை பார்க்கச் சென்றுள்ளார். அந்த இடத்தை தெற்குகாடு கிராமத்தில் வசித்து வரும் ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவி வேம்பரசி இருவரும் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஞானபிரகாசத்திடம், ராதிகா கேட்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஞானப்பிரகாசம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராதிகாவின் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயமடைந்த ராதிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.