மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகள் - கடலூரில் பரபரப்பு
நான்கு மணி நேரத்திற்கு மேல் தொடரும் போராட்டம்:
கடலூர்: குள்ளஞ்சாவடி பகுதியில் பொங்கல் கரும்பு விவசாயிகள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம்.
காலை 10:30 மணிக்கு துவங்கிய போராட்டம் இதுவரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தற்போது கஞ்சி காச்சும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரும்பு கொள்முதலுக்கு அரசு அனுமதி வழங்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.