ஜெயலலிதாவை விமர்சித்த மேயர் - திமுக, அதிமுக இடையே காரசார வாக்குவாதம் - மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு
தஞ்சாவூரில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி மேயருக்கும், அதிமுகவினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு மேயர் சன் ராமநாதன் பதில் சொல்லாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏ1 குற்றவாளி என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குகள் இருந்ததாக அதிமுக உறுப்பினர்கள் கூறியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மேயர் சன் ராமநாதன் திடீரென்று வெளிநடப்பு செய்ததால், சலசலப்பு ஏற்பட்டு கூட்டம் பாதியிலேயே முடிந்தது.