#BREAKING ||"செந்தில் பாலாஜிக்கு போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும்" -ED -க்கு நீதிமன்றம் உத்தரவு

Update: 2023-06-16 16:40 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நிபந்தனைகள் விதித்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், "சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக்கூடாது" "செந்தில் பாலாஜியின் உடல்நிலை, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருத்துவமனையிலேயே விசாரிக்க வேண்டும்" "செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும்" "போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும்" "மூன்றாம் தர விசாரணை முறையைப் பயன்படுத்தக்கூடாது, எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யக்கூடாது"

Tags:    

மேலும் செய்திகள்