இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை, சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். இந்நிலையில் ஆயிஷா முகர்ஜி தன்னை மிரட்டியதாக, டெல்லி நீதிமன்றத்தில் தவான் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தனது புகழையும், வாழ்க்கையையும் கெடுத்து விடுவதாக ஆயிஷா மிரட்டியதாகவும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை அதிகாரி தீரஜ் மல்ஹோத்ராவுக்கு, தன்னைப் பற்றி அவதூறாக செய்திகள் அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவான் குறித்து அவதூறான செய்திகளை பரப்ப ஆயிஷா முகர்ஜிக்கு தடை விதித்துள்ளது.