கும்பகோணம் அருகே இன்னம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி-சரோஜா தம்பதி. இவர்கள் திருமணம் ஆகி 50 ஆண்டுகாலமாக இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் நேற்று கலியமூர்த்தி, வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.
இதனையடுத்து உறவினர்கள் இறுதிச்சடங்கு வேலைகளில் ஈடுபட்டு வந்த போது மனைவி சரோஜாவும் இயற்கை எய்தினார்.
இருவரும் ஒரே நாளில் இவ்வுலகை விட்டு பிரிந்த நிகழ்வு உறவினர்களிடையே சோகத்துடன் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.