- நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் 4 மணி நேரத்தை கடந்து கனமழை பெய்தது. கோடியக்கரை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், செம்போடை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளை விட்டி வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.