ரூ.63 லட்சம் மோசடி செய்த ஜோடி அதிரடி கைது | Tirupathur

Update: 2023-06-23 15:38 GMT

திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, 63 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜமுனா ராணியிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமாவதி, பிரவீன்குமார் தம்பதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜமுனாராணி, 63 லட்சம் ரூபாயை பங்கு சந்தையில் முதலீடு செய்ய கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில லட்சங்களை மட்டும் முதலீடு செய்த தம்பதியினர், மீதி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜமுனாராணி அளித்த புகாரின் பேரில்,மோசடியில் ஈடுபட்ட ஹேமாவதி மற்றும் பிரவீன்குமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்