பஞ்சு மிட்டாய் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு.. முதல்முறையாக அம்பலமான மர்மம்
கேரளாவி ல் துணிகளுக்கு நிறம் ஏற்ற பயன்படுத்தப்படும் வேதி பொருளான ரோடமைன் பயன்படுத்தி பஞ்சு மிட்டாய் தயார் செய்ததைக் கண்டறிந்த உணவு பாதுகாப்புத்துறையினர், ஆயிரம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளியில் ஒரு வாடகை கட்டிடத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் விற்பனை செய்யும் பஞ்சு மிட்டாயில் அதிக அளவில் நிறம் இருப்பது உணவு பாதுகாப்புத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த கட்டிடத்திற்குள் சென்று உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது மிட்டாய் தயாரிக்க சர்க்கரையுடன் நிறத்திற்காக துணிகளில் நிறம் ஏற்ற பயன்படுத்தப்படும் ரோடமைன் என்ற வேதிப்பொருளைச் சேர்த்து பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட ஆயிரம்
பஞ்சு மிட்டாய் பாக்கெட்களை பறிமுதல் செய்து அழித்தனர்