சாலையை ஆக்கிரமித்து பேனர் வைத்ததாக புகார்.. பொம்மைக்கு சாட்டை அடி தந்து சமூக ஆர்வலர் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில், தலையில்லா உருவ பொம்மையை சமூக ஆர்வலர் சாட்டையால் அடிக்கும் வீடியே சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விதிமீறி சாலையை ஆக்கிரமித்து திமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் பேனர் வைத்ததாகவும், புகார் அளித்தும் போலீசார் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த வீடியோவில் சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.