'தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி' மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தற்கொலைக்கு முயன்ற தனியார் கல்லூரி மாணவி, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்தகவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவி ரம்யா, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, சுய நினைவை இழந்த மாணவி ரம்யா, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த தனியார் கல்லூரி மற்றும் மாணவியின் வீட்டில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.