இன்ஜினியர் மாணவனின் உயிரை பறித்த பார்ட் டைம் Job... போனை பார்த்து தலையில் அடித்து கதறிய தாய்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பானது.
செய்யாறு அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர் விமல்.
இவர் கல்லூரி முடிந்து பகுதி நேர பணியாக டயர் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடையின் உரிமையாளருக்கும், விமலுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து விமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவனின் தற்கொலைக்கு காரணமான டயர் கடை உரிமையாளரை கைது செய்ய கோரி மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பானது.