கல் குவாரி தண்ணீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் பலி

Update: 2023-05-13 02:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே, குவாரி தண்ணீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜிலியம்பாறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி செந்தில் என்பவரின் மகன், பள்ளியில் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்தார். செட்டியூரில் உள்ள தனியார் கல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில், சிறுவன் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர், சிறுவனின் உடலை மீட்டனர். இதனிடையே, மாணவனின் இறப்பிற்கு குவாரி உரிமையாளர்கள் உரிய இழப்பீடு வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்